கூட்டணி அரசு வளர்ச்சி கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது விருது வழங்கும் விழாவில் குமாரசாமி பேச்சு

கூட்டணி அரசு வளர்ச்சி கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருவதாக தேவராஜ் அர்ஸ் விருது வழங்கும் விழாவில் குமாரசாமி தெரிவித்தார்.

Update: 2018-12-05 23:00 GMT
பெங்களூரு, 

கூட்டணி அரசு வளர்ச்சி கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருவதாக தேவராஜ் அர்ஸ் விருது வழங்கும் விழாவில் குமாரசாமி தெரிவித்தார்.

தேவராஜ் அர்ஸ் விருது

பெலகாவியை சேர்ந்த சிவாஜி சத்ரப்பா காகனிகல் சமூக சீர்திருத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு கர்நாடக அரசு சார்பில் தேவராஜ் அர்ஸ் விருது நேற்று பெங்களூரு விதான சவுதாவில் முதல்-மந்திரி குமாரசாமி வழங்கினார்.

அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசும், நினைவு கேடயமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் குமாரசாமி பேசியதாவது:-

வளர்ச்சி கொள்கையை முன்வைத்து...

இன்றைய கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று சிவாஜிசத்ரப்பா காகனிகல் கூறுகிறார். அவரது இந்த கருத்து சரியானதே. இன்றைய கல்வி முறை பற்றி பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்கள் எழுகின்றன. எங்கள் கூட்டணி அரசு வளர்ச்சி கொள்கையை முன்வைத்து செயல்பட்டு வருகிறது.

அரசு செய்ய வேண்டிய பணியை ஒரு நபர் செய்திருக்கிறார். அரசின் கண்களை திறக்கும்படி சிவாஜிசத்ரப்பா காகனிகல்சமூக சேவைசெய்துள்ளார்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

சொந்த வீடு இல்லை

இதைதொடர்ந்து விருது தேர்வு குழு தலைவரான எழுத்தாளர் பரகூரு ராமச்சந்திரப்பா பேசுகையில், “13 நிமிடங்களில் சிவாஜிசத்ரப்பா காகனிகல்லை இந்த விருதுக்கு தேர்வு ெசய்தோம். தேர்வு குழுவில் இருந்த அனைவரும் இதற்கு ஒப்புதல் வழங்கினர். சமூக மேம்பாட்டிற்காக அவர் கடந்த 50 ஆண்டுகளாக உழைத்து வருகிறார். அவருக்கு சொந்த வீடு இல்லை. பெண்களுக்கு இரவு பள்ளியை நடத்துகிறார். ஏழை குழந்தைகளின் கல்விக்காக 14 பள்ளிகளை திறந்துள்ளார். அவர் இந்த விருதுக்கு முழுமையான தகுதி உள்ளவர் ஆவார்” என்றார்.

மேலும் செய்திகள்