போளூர் போலீஸ் உட்கோட்டத்தில் சாலை விதிகளை மீறிய 1,544 பேர் மீது வழக்கு ரூ.1¾ லட்சம் அபராதம் வசூல்

போளூர் போலீஸ் உட்கோட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக 1,544 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Update: 2018-12-06 22:45 GMT
போளூர், 

போளூர் போலீஸ் உட்கோட்டத்தில் போளூர், கடலாடி, கலசபாக்கம், சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த நவம்பர் மாதத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 458 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 269 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 103 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் கார் ஓட்டும் போது ‘சீட் பெல்ட்’ அணியாமல் இருந்த 38 பேர் மீதும், வாகனங்களில் அதிகம் பேரை ஏற்றி சென்ற 83 பேர் மீதும், வாகனம் நிறுத்தக்கூடாத இடங்களில் வாகனம் நிறுத்திய 81 பேர் மீதும் என சாலை விதிகளை மீறியதாக மொத்தம் 1,544 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேற்கண்ட தகவலை போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்