ஆவடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் தடை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆவடி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2018-12-07 22:15 GMT
ஆவடி,

ஆவடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை நிர்வாக மண்டல இயக்குனர் இளங்கோவன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணி புதிய ராணுவ சாலையில் காமராஜர் நகர் வரை சென்று மீண்டும் நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.

இந்த பேரணியில் நகராட்சி ஆணையர் ஜோதிகுமார், சுகாதார ஆய்வாளர் ஜாபர், பொது சுகாதார பிரிவு ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, ஆவடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள் வருகிற 10-ந் தேதிக்கு மேல் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தால் அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி அபராதத்துடன் சிறை தண்டனை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார ஆய்வாளர் ஜாபர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்