தேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி

தேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி மேற்கொண்டார்.

Update: 2018-12-08 22:15 GMT

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக ஆய்வுக்கு சென்று தூய்மை, கழிவுநீர் வாய்கால்களை தூர்வாருதல், நிலத்தடி நீர் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அதன்படி அவர் கடந்த 5–ந் தேதி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறைமுக வளாகத்தில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடந்தன. இங்கு 8–ந் தேதி தூய்மை பணி மேற்கொள்ளப்படும் என்றும், இதில் தன்னார்வலர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கலந்துகொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை கவர்னர் கிரண்பெடி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றார். அங்கு அவர் தூய்மை பணி மேற்கொண்டார். துறைமுக வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், மதுபான காலி பாட்டில்களை கவர்னர் அகற்றி, சுத்தம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல்படையினர், ஆச்சார்யா பள்ளி மாணவர்கள், மீனவர்கள், துப்புரவாளர்கள் கலந்துகொண்டு, துறைமுகத்தை தூய்மை செய்தனர். இங்கு சேகரிக்கப்பட்ட கழிவு பொருட்கள் நகராட்சி வாகனம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்