அரசு போக்குவரத்து கழகம் சார்பில்: சபரிமலை சீசனை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சபரிமலை சீசனை முன்னிட்டு 100 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

Update: 2018-12-12 22:15 GMT
திண்டுக்கல், 

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருகிற 26-ந்தேதி மண்டல பூஜையும், அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி மகரவிளக்கு பூஜையும் நடக்கிறது. இதையொட்டி, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். பக்தர்களின் வசதிக்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு மதுரை அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் இருந்து குமுளிக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல குமுளியில் இருந்து சபரிமலைக்கு செல்ல கேரள மாநில போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

மேலும், குமுளி, திண்டுக்கல், பழனி, திருச்சி, மதுரை பஸ்நிலையங்களில் பக்தர்களுக்கு வழிகாட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல குமுளியில் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவலை மதுரை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் சேனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்