கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-18 22:45 GMT

மதுரை,

கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மடிக்கணினிகளுக்கு இணையதள வசதி கொடுக்க வேண்டும், மாவட்ட கலந்தாய்வு ஒரேநாளில் நடத்த வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே அடையாள வேலை நிறுத்தம், தாலுகா அலுவலகங்களில் இரவுநேர காத்திருப்பு போராட்டம் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ‘மக்களை தேடி’ என்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்தால் மாணவ–மாணவிகள், பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராஜா முத்தையா மன்றத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜாமணி வரவேற்றார். துணைத்தலைவர் அக்னிராஜா, துணை செயலாளர் தங்கபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்