உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு தி.மு.க.தான் காரணம் - கடலூரில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு தி.மு.க.தான் காரணம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2018-12-27 22:00 GMT
கடலூர், 

தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடியின்போது பெரிய விவசாயிகள் பலன் அடைந்தனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடியால் சிறு, குறு விவசாயிகளின் விவசாய கடனும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளிவரும்போது கூட்டணி பற்றி முடிவு செய்வோம். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததற்கு தி.மு.க. தான் காரணம். இட ஒதுக்கீடு கேட்டு அவர்கள்தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் பழி எங்கள் மீது விழுகிறது. நாங்கள் யாரை கண்டும் பயப்படுவதில்லை. மக்கள்தான் எங்கள் எஜமானர்கள். குடிமராமத்து பணிகளால் விவசாயம் நன்கு செழித்துள்ளது. ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்தது பற்றி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, அ.தி.மு.க. ஒரு ஆலமரம். அதில் பழுத்த இலைகள் கீழே விழும். ஆனால் மரத்தின் ஆணிவேரான தொண்டர்கள் எங்களிடம் தான் இருக்கிறார்கள் என்றார்.

மேலும் செய்திகள்