கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது

கம்பம் காட்டுப்பள்ளிவாசல் அருகே கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-12-31 22:15 GMT
கம்பம், 

கம்பம் காட்டுப்பள்ளிவாசல் அருகேயுள்ள 18-ம் கால்வாய் பகுதியில் கம்பம் வடக்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டனர். இதில் காரில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த டிலேட்மாத்யூ(வயது 27), ராகுல்ராஜேந்திரன்(26), விஜி பாபு(31) என்பதும், கம்பம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த தங்கராசு (74) மற்றும் அவரது மகன் சிவராமன் ஆகியோரிடம் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி அதை கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிலேட்மாத்யூ, ராகுல்ராஜேந்திரன், விஜிபாபு மற்றும் கஞ்சா விற்ற தங்கராசு ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவராமனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்