ஆயுத கடத்தல்காரர்கள் 2 பேர் கைது 10 துப்பாக்கிகள் பறிமுதல்

அமராவதியில் ஆயுத கடத்தல்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-12-31 23:33 GMT
தானே,

தானே நகரில் உள்ள ஷீல் தசிகர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் ஆயுத கடத்தல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியான முகேஷ், அமராவதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வர இருப்பதாக தானே குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அமராவதி சென்று உள்ளூர் போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் போலீசார் வருவதை அறிந்து ஆயுத கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான முகேஷ் தப்பித்து சென்றார். எனினும் போலீசார் அவரது கூட்டாளிகள் சோகைல் சேக் (21), ரகீம் ஹபிப் சேக்கை (32) பிடித்து கைது செய்தனர்.

போலீசார் அவர்களிடம் இருந்து 10 துப்பாக்கிகள் மற்றும் 40 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் பீகார் மாநிலம் முங்கர் பகுதியில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என போலீசார் கூறினா்.

இதையடுத்து போலீசார் பிடிபட்ட 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை 7-ந் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த ஆயுத கடத்தல் வழக்கின் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்