பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகளை இணையதளம் மூலம் இலவசமாக நிறைவேற்றிக்கொள்ளலாம் கலெக்டர் பிரபாகர் தகவல்

பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகளை இணைய தளம் மூலம் இலவசமாக நிறைவேற்றிக்கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-02 22:15 GMT
கிருஷ்ணகிரி, 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டை தொடர்புடைய சேவைகளான புதிய மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் விண்ணப்பத்தின் நிலை அறிந்து கொள்ளுதல், குடும்ப அட்டை விவரங்களை மாற்றுதல், உறுப்பினரை சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றுதல் போன்றவற்றை வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்லாமலேயே, அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவோ அல்லது மக்கள் சேவை மையங்கள் மூலமாகவோ அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவைகளை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in என்ற முகவரியில் இலவசமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.

பொதுமக்கள் 1967 அல்லது 1800 425 5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் உதவி மையத்தை தொடர்பு கொண்டு பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகளை பெறலாம் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். பொது வினியோக திட்டம் தொடர்பான குறைபாடுகளை மாவட்ட குறை தீர் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலருக்கு 04343- 234677 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்