வண்டலூர் பூங்காவில் இயற்கை உணவு கண்காட்சி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் தினமும் ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம், இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் நேற்று உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2019-01-05 22:30 GMT
வண்டலூர்,

முகாமுக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுமார் தலைமை தாங்கினார். பூங்காவின் இணை இயக்குனர் சுதா ராமன், செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் வைக்கப்பட்டு இருந்த இயற்கை உணவு வகைகள் கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பூங்காவுக்கு வந்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்கை உணவு குறித்து விளக்கமாக கூறினார்கள். இந்த முகாமில் குளிர்காலத்தில் எப்படிப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும், எந்த உணவு பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், இயற்கை உணவு மற்றும் கலப்பட உணவு குறித்த துண்டு பிரசுரங்களை பூங்காவிற்கு வந்த பொதுமக்களுக்கு கலெக்டர் வழங்கினார். இதனை தொடர்ந்து பூங்காவில் நடமாடும் உணவு ஆய்வக வாகனத்தை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.

மேலும் செய்திகள்