கிராமசபை கூட்டத்தில் இலவச வெள்ளாடு பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வெள்ளாடு பெற கிராமசபை கூட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-09 22:45 GMT
தூத்துக்குடி, 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் 2018-19-ம் ஆண்டு டிசம்பர் 2018 மாதத்துக்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக முறப்பநாடு கோவில்பத்து, முறப்பநாடு புதுகிராமம், முக்காணி, நட்டாத்தி, முத்தாலங்குறிச்சி, நாணல்காடு,

திருச்செந்தூர் கோட்டம் நெடுங்குளம், மீரான்குளம், மேலஆத்துர், மலவராயநத்தம், கோவில்பட்டி கோட்டம் காலம்பட்டி, கலங்கரைபட்டி, கீழமங்கலம், கீழக்கோட்டை, கீழ்நாட்டுக்குறிச்சி, கவுண்டன்பட்டி, கீழவிளாத்திகுளம், காமநாயக்கன்பட்டி, கன்னக்கட்டை, கொடியன்குளம், கொல்லம்பரும்பு ஆகிய 21 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

இந்த கிராமங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்வதற்காக நாளை(வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராமசபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இலவச வெள்ளாடுகள் பெற விரும்பும் பயனாளிகள் கலந்து கொண்டு விண்ணப்பத்தை அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தில் இருந்து வருகிற 18-ந் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபையில் தேர்வுக்குழுவினரால் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்