இளையான்குடி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்கக் கோரி கிராம மக்கள் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-21 22:30 GMT
இளையான்குடி,

இளையான்குடி அருகே உள்ள அதிகரையை கிராமத்தை சேர்ந்த ஒரு பிரிவினர் நேற்று இளையான்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அங்குதுரை வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வருவதில்லை, அருகில் உள்ள மற்றொரு பிரிவினர் வசிக்கும் இடத்திற்கு சென்று தண்ணீர் பிடிக்கும் போது பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தொவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தண்ணீர் பிரச்சினையான நேரத்தில் ஊரில் இருக்கும் நீர்தேக்க தொட்டியில் இருந்து தங்கள் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினர். இதைக்கேட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் 2 நாட்களில் நீர்த்தொட்டியில் இருந்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் பகுதிக்கு தனியாக ஆழ்துளை கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து முற்றுகையிட்ட கிராமத்தினர் கலைந்து சென்றனர். அப்போது அவர்கள் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறிச் சென்றனர்.

மேலும் செய்திகள்