கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

புதுச்சேரி அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு சார்பில் 100 அடி சாலையில் உள்ள பள்ளி கல்வித்துறை அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.;

Update:2019-02-02 03:45 IST

புதுச்சேரி,

 ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அந்தந்த மாத இறுதியில் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 4 மாத ஊதியம் மற்றும் பென்‌ஷன் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தி, அரசு ஆணை வெளியிட வேண்டும், தகுதி உள்ள ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

போராட்டத்திற்கு கூட்டமைப்பு துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். செயலாளர் மார்டீன் கென்னடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் அரசு ஊழியர் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாச்சலம் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்