பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லை வைகோ பேட்டி

பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் இல்லை என மதுரை விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Update: 2019-02-02 23:30 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் மோடி அரசு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு பட்ஜெட்டில் சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரெயில்வே திட்டமோ, வளர்ச்சி திட்டமோ இல்லை. இதன்மூலம் தொடர்ந்து மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணிப்பது தெரிகிறது. பா.ஜ.க. தென் மாநிலங்களில் வெற்றி பெற வழியில்லை. ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான சூழ்நிலை உருவானால் அதற்கு மாநில அரசு தான் காரணம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. புயலினால் 89 பேர் இறந்துள்ளனர். இதற்கு இரங்கலோ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி நிவாரணம் தேவை. அதை வழங்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்