நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலா

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலா சென்று வந்தனர்.

Update: 2019-02-03 22:30 GMT
நெல்லை, 

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் வெளி மாநிலங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதையொட்டி நெல்லை மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளரும், முதன்மை கல்வி அலுவலருமான பாலா ஆலோசனைப்படி நெல்லை மாவட்டத்திலும் ஒவ்வொரு கல்வி மாவட்டத்தில் இருந்து அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த தலா 18 மாணவ-மாணவிகள் வீதம் மொத்தம் 90 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் மோசஸ் தலைமையில் பெங்களூருக்கு ரெயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் தலைமை ஆசிரியர் மாரியப்பன், ஆசிரியர்கள் சுந்தரகுமார், கணேசன், சாந்தி, ராஜம், எஸ்தர், மாலதி, மேரி புஷ்பலதா, இஷபெல்லா, உஷாராணி ஆகிய ஆசிரிய, ஆசிரியைகளும் சென்றனர். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் நாராயணன் வழியனுப்பி வைத்தார்.

அங்கு விஸ்வேசுவரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அவர்களுக்கு கணிதம், எச்.ஏ.எல். விமான நிலைய காட்சியகத்துக்கு சென்று விமானம் உருவான வரலாறு, பல்வேறு வகையான விமானங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் கர்நாடகா மாநில சட்டசபை, கோர்ட்டு, லால்பாக் தாவரவியல் பூங்கா சென்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ரெயில் மூலம் புறப்பட்டு நெல்லைக்கு திரும்பி வந்தனர். 

மேலும் செய்திகள்