நீடாமங்கலத்தில் கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளர்களுக்கு அபராதம்

நீடாமங்கலத்தில் கடைகளில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2019-02-03 22:45 GMT
நீடாமங்கலம்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆகியோரின் உத்தரவின்படி, நீடாமங்கலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி பேரூராட்சியின் செயல் அலுவலர் சங்கர் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் நேற்று முன்தினம் நீடாமங்கலத்தில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 13 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் செய்திகள்