பிப்ரவரி 14-ந் தேதியன்று சித்தன்னவாசல் வரும் காதலர்களுக்கு தடை விதிக்க வேண்டும்

காதலர் தினமான பிப்ரவரி 14-ந் தேதியன்று சித்தன்னவாசல் வரும் காதலர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2019-02-10 22:45 GMT
அன்னவாசல், 

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா தலத்திற்கு காதலர் தினத்தன்று காதலர்களில் சிலர், சித்தன்னவாசலில் முகாமிட்டு ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதும், மலை உச்சியில் ஆர்வ மிகுதியால் பல்வேறு கோணங்களில் ஆபத்தான பகுதிகளில் செல்பி எடுப்பதும், சிலர் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.

எனவே காதலர் தினத்தன்று சித்தன்னவாசலில் காதலர்களை அனுமதிக்க கூடாது. அதே போன்று சிலர் சித்தன்னவாசல் பூங்காவில் செடி, கொடிகள் அடர்ந்த பகுதிகளில் அமர்ந்து அநாகரிக செயல்களில் ஈடுபடுவது, மற்ற சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கின்றது. எனவே அது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சித்தன்னவாசல் நுழைவு வாயிலில் போலீசாரை நிறுத்தவும், பூங்காக்களில் சமணர் படுக்கை, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்