உதிரிபாகங்களுக்காக கார்களை திருடிய முதியவர் கைது

உதிரிபாகங்களுக்காக கார்களை திருடி வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-11 23:15 GMT
மும்பை,

மும்பை மாட்டுங்காவில் கடந்த மாதம் கார் ஒன்று காணாமல் போயிருந்தது. இதுபற்றி அதன் உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை திருடியவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், திருட்டுப்போன கார் கோரேகாவ் தின்தோஷி நகரில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். காரை திருடியதாக அந்த பகுதியை சேர்ந்த முகமது கமில் நூர்முகமது அன்சாரி (வயது 65) என்ற முதியவரை பைகுல்லாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தாவது:-

முகமது கமில் நூர்முகமது அன்சாரி சொந்தமாக 4 டாக்சிகள் வைத்துள்ளார். இவரின் டாக்சிகள் பழுதாகும் போது பணம் கொடுத்து புதிதாக உதிரிபாகங்கள் வாங்குவதற்கு பதிலாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்களை திருடி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று தனக்கு தேவையான உதிரிபாகங்களை கழற்றி எடுப்பார்.

பின்னர் அந்த கார்களை உடைப்புக்கான ஏஜெண்டுகளிடம் விற்று விடுவார் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது 43 வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

மேலும் செய்திகள்