வேலைவாய்ப்பு செய்திகள்: தமிழக அரசு வேலை

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசுத்துறையின் ‘இ-கவர்னன்ஸ்’ பிரிவில் அசிஸ்டன்ட் சிஸ்டம் என்ஜினீயர், அசிஸ்டன்ட் சிஸ்டம் அனலிஸ்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

Update: 2019-02-12 12:20 GMT
மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அசிஸ்டன்ட் சிஸ்டம் என்ஜினீயர் பணிக்கு 36 இடங்களும், அசிஸ்டன்ட் சிஸ்டம் அனலிஸ்ட் பணிக்கு 24 இடங்களும் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 21 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பெறுபவர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், ஐ.டி., எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் பி.இ., பி.டெக். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, பிப்ரவரி 20-ந் தேதிக்குள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம், வருகிற ஏப்ரல் 7-ந் தேதி இதற்கான தேர்வுகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்