கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்

கல்வி உதவித் தொகையை உடனடியாக வழங்கக்கோரி மன்னார்குடி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-02-12 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விழுந்த மரங்களை அப்புறப் படுத்த வேண்டும்.கழிப்பிடம், மைதானம், நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிளை மேம்படுத்தி தர வேண்டும். கல்வி உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் சரவணன், கிஷோர், ஹரிகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.

இதில் மாவட்ட துணை தலைவர் பாரதி, மாணவர் மன்ற நிர்வாகிகள் கோபி, அஜீத், தமிழினியன், சேகுவேரா, லெட்சுமணன் உள்பட 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்