மனிதர்களே இல்லாமல் விவசாயம்

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தாலும், உணவுத் தேவையை பூர்த்தி செய்வது விவசாயத்தால் மட்டுமே முடியும்.

Update: 2019-02-13 10:24 GMT
வெயிலிலும் மழையிலும் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவவே இங்கிலாந்தைச் சேர்ந்த ஹார்ப்பர் ஆடம்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மனிதர்களே இல்லாமல் தானியங்கி வாகனங்களையும், ட்ரான்களையும் மட்டுமே வைத்து பார்லியை பயிரிட்டு சாதனை படைத்துள்ளனர். ‘கைகள் அற்ற ( HANDS FREE ) ஹெக்ட்டேர் ப்ராஜெக்ட்’ என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். தானியங்கி டிராக்டர்களை கொண்டு விதைகளை தூவி, ட்ரான் மூலம் கண்காணித்து மனிதர்கள் அற்ற விவசாயத்தை சாத்தியப்படுத்தியுள்ளனர். சிறப்பான முறையில் அறுவடையும் செய்துள்ளனர். இதுவே எதிர்காலத்தின் விவசாயம் என்கின்றனர் இந்த குழுவினர்.

மேலும் செய்திகள்