அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 9 புதிய பஸ்கள் அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 9 புதிய பஸ்களை அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-17 22:30 GMT

ராமநாதபுரம்,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்து துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 275 புதிய பஸ்களை தொடங்கி வைத்தார். அவற்றில் காரைக்குடி மண்டலத்திற்கு 11 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 பஸ்கள் வந்துள்ளன. இவற்றை ராமநாதபுரம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் மணிகண்டன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார்.

இந்த பஸ்கள் ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம் ராமநாதபுரம் – மதுரை வழித்தடம், ஏர்வாடி தர்கா – குமுளி, சாயல்குடி–சிதம்பரம், ராமநாதபுரம் புறநகர் கிளையின் மூலம் ராமமேசுவரம்–திருச்சிராப்பள்ளி, பரமக்குடி கிளையின் மூலம் ராமேசுவரம்–மதுரை, முதுகுளத்தூர் கிளை மூலம் முதுகுளத்தூர்–சிதம்பரம், கமுதி கிளையின் மூலம் கமுதி–சேலம் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக இதுவரை மொத்தம் 67 புதிய பஸ்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் கோமதி செல்வக்குமார், துணை மேலாளர் சிவலிங்கம், கோட்ட மேலாளர் சரவணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் பத்மகுமார், தமிழ்மாறன் உள்பட அரசு அலுவலர்கள், அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்