குன்னூர் அருகே விவசாய பயிர்களை சேதப்படுத்திய காட்டெருமைகள்

குன்னூர் அருகே காட்டெருமைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

Update: 2019-02-20 22:45 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே உள்ளது பெட்டட்டி அனியாடா பகுதி. இங்கு மலைக்காய்கறிகள் மற்றும் தேயிலையை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காட்டுயானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைய தொடங்கி விட்டன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அனியாடா பகுதிக்குள் காட்டெருமைகள் புகுந்து வருகின்றன. அவை விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்