மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூரில் நடந்தது

மாநில அளவிலான பள்ளி மாணவ- மாணவிகளுக்கான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூரில் நேற்று நடந்தது.

Update: 2019-02-23 23:00 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியினை பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் 6 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கும், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய 3 பிரிவுகளில் “ஸ்கேட்டிங்” போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்கள் விளையாடிய போது, மைதானத்தில் வெளியே இருந்த அவர்களின் பெற்றோர், உறவினர்கள் உற்சாகப்படுத்தினர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தின் தலைவர் வக்கீல் அன்புதுரை, செயலாளர் வக்கீல் ஆனந்த், பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டி நடக்கிறது.

மேலும் செய்திகள்