மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2019-02-24 22:45 GMT
கிருஷ்ணகிரி,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நகர செயலாளர் கேசவன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான கே.அசோக்குமார் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வம், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் பால்ராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட மாணவர் அணி தலைவர் தங்கமுத்து, முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் வெங்கடாஜலம், இளைஞர் அணி சரவணன், வட்ட செயலாளர்கள் ஸ்ரீதர், ஆறுமுகம், ஏஜாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பர்கூர் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பர்கூர் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி கேக் வெட்டி பொதுமக்களுக்கும், கட்சியினருக்கும் வழங்கப்பட்டது. மேலும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், முன்னாள் எம்.பி. பெருமாள், பர்கூர் நகர செயலாளர் துரைஸ் ராஜேந்திரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மாதையன், மல்லப்பாடி முன்னாள் ஒன்றியகுழு உறுப்பினர் சங்கர், ரங்கசமுத்திரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மத்திகிரி அருகே உள்ள அந்திவாடியில் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.வாசுதேவன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. வட்ட செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். முத்துராஜ், சாக்கப்பா, கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்.

இதில், முன்னாள் பேரூராட்சி தலைவர் விஸ்வநாத், நகர செயலாளர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், அரப்ஜான், கூட்டுறவு சங்க தலைவர் அரிஷ்ரெட்டி, வட்ட செயலாளர் சந்திரன், அப்பையா, நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்