கரூர் அருகே கைகள் கட்டபட்பட்டு சாலையோரமாக கிடந்த கேபிள் ஆபரேட்டர் மீட்பு

கரூர் அருகே கைகள் கட்டப்பட்டு சாலையோரமாக கிடந்த கேபிள் டி.வி. ஆபரேட்டரை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-03-07 23:00 GMT
கரூர்,


நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே குஞ்சாம்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). இவர், கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த, மற்றொரு கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கும் தொழில் போட்டி காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரவணன் திடீரென மாயமானார். இது தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு, சரவணன் கடத்தப்பட்டாரா? என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில் கரூரை அடுத்த சுக்காலியூரில் மதுரை–கரூர் நெடுஞ்சாலையில், சரவணன் கைகள் கட்டப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மயங்கி கிடந்தார். இது குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தாந்தோன்றிமலை போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொழில் போட்டியில் சிலர் சரவணனை கரூருக்கு கடத்தி வந்து உணவு, தண்ணீர் கொடுக்காமல் இருந்தது தெரிய வந்தது. இந்த சரவணன் மீட்கப்பட்டது தொடர்பாக பரமத்தி வேலூர் போலீசுக்கு, தாந்தோன்றிமலை போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பரமத்தி வேலூர் போலீசார் விசாரித்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்