மந்தாரக்குப்பத்தில், திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்

மந்தாரக்குப்பத்தில் திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் கூறினார்.

Update: 2019-03-07 23:00 GMT
மந்தாரக்குப்பம்,

கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் வளையமா தேவி சாலையை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 30). இவருக்கும், சிதம்பரம் டி.கே.எம். நகரை சேர்ந்த ராஜேந் திரன் மகள் கீதா(24) என்பவ ருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 4 மாதங் களுக்கு முன்பு சக்திவேல் வேலைக்காக சிங்கப்பூர் சென்று விட்டார். கீதா, தனது மாமனார் வீட்டில் வசித்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு கீதா தனது, தாயை செல் போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கீதா, மாமனார் குடும்பத்தினர் கொடுமைப் படுத்துவதாகவும், உடனடி யாக இங்கு வந்து தன்னை அழைத்துச்செல்லு மாறும் கூறினார். அதற்கு அவரது தாய், உனது தந்தை வேலை சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார், அவர் வீட்டிற்கு வந்ததும் இது பற்றி தெரிவித்து உன்னை அழைத்து வருவதற்காக அங்கு வருகிறோம் என்றார்.

இதனிடையே இரவு 7 மணி அளவில் தனியாக இருந்த கீதா, துப்பட்டாவால் வீட்டின் உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் ராஜேந்திர னுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரும், அவரது உறவினர் களும் கீதாவின் வீட்டிற்கு வந்தனர். அங்கு பிணமாக தொங்கிய கீதாவின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மீனாள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக விருத்தா சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ராஜேந்திரன், மந்தாரக்குப்பம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகள் கீதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், தீவிர விசாரணை நடத்துமாறும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்