கபிஸ்தலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைத்தார்

கபிஸ்தலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.

Update: 2019-03-10 22:45 GMT
கபிஸ்தலம்,

கபிஸ்தலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கோபிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் அண்ணாமலை, நகர வங்கி தலைவர் சபேசன், மத்திய சங்க செயலாளர் பாஸ்கர், நகர வங்கி துணை தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் நவீன்குமார் வரவேற்றார். அமைச்சர் துரைக்கண்ணு ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்து, முகாமை தொடங்கி வைத்தார். இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன், உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகநாதன், முருகதாஸ், கண்ணன், ராஜேந்திரன், காதர் ஒலி, டி.ஆர்.முருகேசன், செந்தில்குமார், சின்னையன், முருகன், குமார், திலகவதி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்