நாகர்கோவில் அருகே சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில் அருகே சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-17 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18–ந் தேதி நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையொட்டி வாக்காளர் களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யாமல் தடுப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 பறக்கும் படை வீதம் மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக விழித்திருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தாசில்தார் பாண்டியம்மாள் தலைமை யிலான பறக்கும் படையினர் நேற்று நாகர்கோவில் அருகே எறும்புக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடு பட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை மடக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அதில் ரூ.4 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த பணம் எங் கிருந்து கொண்டு வரப் பட்டது? யாருடைய பணம்? என்றெல்லாம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப் போது அந்த பணம் நாகர் கோவிலில் உள்ள ஒரு துணிக் கடைக்கு சொந்த மானது என்பது தெரியவந்தது. ஆனால் பணத்தை கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் கார் டிரைவரிடம் இல்லை. இதனையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுபற்றி கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு பணத்தை கருவூலக அலுவல கத்தில் ஒப்படைத்தனர். சொகுசு காரில் கொண்டு சென்ற ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்