உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

பொறையாறு அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-03-18 23:00 GMT
பொறையாறு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதைபோல நாகை மாவட்டம் பொறையாறு அருகே காத்தான்சாவடியில் தேர்தல் பறக்கும்படை அலுவலரும், சமூக பாதுகாப்பு தனி தாசில்தாருமான சுந்தரி தலைமையில் அதிகாரிகள், பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிதம்பரம் பகுதியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காருக்குள் ரூ.1 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இந்த பணத்தை சேலம் மாவட்டம் ஆத்தூர் வடசென்னிமலையை சேர்ந்த சீனுவாசன் (வயது 53) என்பவர் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயராணியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர், சீனுவாசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்