புதுக்குடியிருப்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏவுகணை உதிரி பாகம் போலீசார் தீவிர விசாரணை

பனைக்குளம் புதுக்குடியிருப்பு கடற்கரையில் ஏவுகணை உதிரி பாகம் கரை ஒதுங்கியது. இதுகு றித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2019-03-27 23:15 GMT

பனைக்குளம்,

ராமநாதபுரம் அருகே பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொழில் செய்துவரும் கடற்கரையில் நேற்று காலை ராக்கெட் வடிவத்தில் மர்ம பொருள் கரை ஒதுங்கியிருப்பதாக தேவிபட்டினம் கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்வையிட் டனர். மேலும் ராமநாதபுரம் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்த அந்த பாகத்தில் பிரமோஸ் என்றும், ஐ.டி.என். நம்பர் பி.எஸ்.ஐ.–எஸ்.ஐ.டி.வி.சி/பி.டி.–71, பி.பி.டி. அட் 132 கே.எஸ்.சி. 24.10.2016 என்று எழுதப்பட்டி ருந்தது. சுமார் 15 அடி நீளம் கொண்ட இந்த பாகத்தின் முன்பகுதியில் வயர்கள் இருந்தன. இதனை போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பிரமோஸ் ஏவுகணையை இந்தியா சோதனை ஓட்டத்தில் பயன்படுத்தியபோது அதன் உதிரி பாகம் உடைந்திருக்கலாம் என்றும், கடலில் விழுந்த அந்த பாகம் நீண்ட காலமாக மிதந்து வந்து தற்போது கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா உத்தரவின்பேரில் பனைக்குளம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏவுகணையின் பாகம் ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிராக்டரில் ஏற்றப்பட்டு தேவிபட்டினம் கடலோர காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்