அ.தி.மு.க.வை அழித்துவிடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.வை அழித்து விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று, மன்னார்குடியில் முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.;
திருவாரூர்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நாகை மாவட்டத்தில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நாகை நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து வேதாரண்யத்திலும் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய இடங்களிலும் பிரசாரம் செய்தார். பின்னர் மன்னார்குடியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜனை ஆதரித்து பேசினார். அப்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:–
50 ஆண்டு கால காவிரி பிரச்சினையில் கடந்த 2007–ம் ஆண்டு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடாளு மன்றத்திலும் குரல் கொடுக்கவில்லை. இதனால் 10 ஆண்டுகாலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். விவசாயிகளுக்கு துரோகம் செய்தது தி.மு.க. தான்.
இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சராக வந்த ஜெயலலிதா சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அ.தி.மு.க. எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். 23 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது. அதன் பின்னர் காவிரி மேலாண்மைவாரியம் ஒழுங்குபடுத்தும் குழு அமைக்கப்பட்டது.
கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ஓய்வுபெற்ற 4 பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சென்று எங்கெல்லாம் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது என ஆய்வு மேற்கொள்வார்கள். இவர்கள் அளிக்கும் ஆய்வு அறிக்கை அடிப்படையில் எந்த பகுதிகளில் தடுப்பணைகள் தேவைப்படுகிறதோ அங்கு
தடுப்பணைகள் கட்டப்படும். தமிழகத்தில் மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ.1000 கோடியில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது.
சென்னையில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சேலத்தில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தொழில் அடிப்படையிலும் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
வேதாரண்யம் தொகுதியில் மீன்பிடித் துறைமுகம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. செம்போடையில் ஐ.டி.ஐ. அமைக்கப்பட உள்ளது. தாணி கோட்டம் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கபட்டு உள்ளது. வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 60 ஆண்டுகள் ஓடாமல் இருந்த தேரை புதிதாக செய்ய நடவடிக்கை ஏற்பட்டு உள்ளது. திருத்துறைப்பூண்டி தொகுதியில் தமிழக அரசு ஏராளமான திட்டங்களை செய்துள்ளது. முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு தி.மு.க. பிரமுகர் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் பெண்கள் பாதுகாப்பு பற்றி மு.க. ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க.ஆட்சியில் தமிழகத்தில் 76 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆனால் என்னைப் பார்த்து மு.க. ஸ்டாலின் மண்புழு போல ஊர்ந்து செல்வதாக கூறி உள்ளார். மண்புழு விவசாயிகளின் நண்பன். அது நிலத்தில் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை உரத்தை அளிக்கிறது. நான் விவசாயிகளின் நண்பன். ஆனால் விவசாயிகள் கஷ்டப்பட்டு வளர்த்த பயிர்களை அழிக்கும் வைரஸ் கிருமிதான் மு. க.ஸ்டாலின். எனவே செடிகளில் உள்ள பூச்சிகளை அழிப்பது போல, இந்த தேர்தலிலும் தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும்.
சிறுபான்மை மக்களை குழப்பி தேர்தல் மூலம் ஆதாயம் தேட தி.மு.க.. முயற்சி செய்கிறது.
1989–ம் ஆண்டு ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட போது நானும் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டேன். அவர் எங்களை குறைத்து மதிப்பிட்டு விட்டார். எந்த பிரச்சினை என்றாலும் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவர் தூங்கும்போது கூட என்னைப் பற்றித்தான் நினைக்கிறார். அவர் தி.மு.க. தலைவருடைய மகன் என்பதால் இந்த பதவியை அடைந்து இருக்கலாம். ஆனால் நான் கிளைச்செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், எம். எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என உயர்ந்து இந்த பதவியை அடைந்துள்ளேன்.
அ.தி.மு.க.வை அழித்துவிடலாம். ஆட்சியை கவிழ்த்து விடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். மு.க.ஸ்டாலினின் இந்த கனவு ஒருபோதும் பலிக்காது. இவரைப்போலவே டி.டி.வி. தினகரனும் அ.தி.மு.க.வை அழிக்க முயற்சி செய்து வருகிறார். அவர் 10 ஆண்டுகாலம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்கப்பட்டவர். அவர் இன்று இந்த கட்சியை பிடிக்க முயற்சிக்கிறார். தற்போது அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க முடியாது. கட்சியை பிடிக்கவும் முடியாது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது ஒரு கட்சியே கிடையாது. அது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படவில்லை. அது ஒரு அமைப்பு. இந்த தேர்தலில் அவர்கள் தில்லுமுல்லு செய்து ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். எனவே துரோகிகளுக்கு இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்டுங்கள். நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தாழை. சரவணனுக்கு இரட்டை இலை சின்னத்திலும், தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா.வேட்பாளர் என்.ஆர் நடராஜனுக்கு ஆட்டாரிக் ஷா சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
முதலமைச்சருடன் அமைச்சர்கள் ஓ.எஸ் மணியன், காமராஜ், கோபால் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.