100 சதவீதம் வாக்களிப்பது குறித்து படகில் சென்று மாணவர்கள் விழிப்புணர்வு

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாகையில் மாணவர்கள், படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2019-04-01 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மக்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள், படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அக்கரைப்பேட்டை பாலம் அருகில் இருந்து புதிய மீன் இறங்கும் தளம் வரை சுமார் 150 மீட்டர் தூரம் 2 படகுகளில் பயிற்சி மைய மாணவர்கள், ஆசிரியர்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் குறித்த வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, கடலுக்கு மீன்பிடிக்க சென்று கொண்டிருந்த மீனவர் களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

மேலும் செய்திகள்