வையம்பட்டி அருகே தைல மரங்கள் தீயில் எரிந்து நாசம்

வையம்பட்டி அருகே தைலமரங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

Update: 2019-04-04 23:00 GMT
வையம்பட்டி,

திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த ஆசாத்ரோடு அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாருக்கு சொந்தமான தைல மரக்காடு உள்ளது. இங்கு காய்ந்து கிடந்த சருகில் நேற்று திடீரென தீப்பிடித்தது. இந்த தீ தைல மரங்களிலும் பிடித்து எரிய தொடங்கியது. இதனால், அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.

அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மணப்பாறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒரு சில தைல மரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இதேபோல, மணப்பாறையை அடுத்த கோட்டைக் காரன்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் தீப்பிடித்தது. தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்த, அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க போராடினர். இதற்கு பயன் கிடைக்காததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மணப்பாறை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் போர் எரிந்து நாசமானது. 

மேலும் செய்திகள்