குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-04-05 22:30 GMT
கொடைரோடு,

அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாவூத்தன்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடும் வறட்சி காரணமாக அப்பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலிக்குடங்களுடன் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் பூங்கொடி முருகு, அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்