புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை.

Update: 2019-04-11 22:15 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவில் தங்கி உள்ளவர்களை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் வெளி ஆட்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. இந்தநிலையில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தான் வாங்கி வந்திருந்த உணவை உள்நோயாளிக்கு கொடுக்க வேண்டுமென அங்கிருந்த பாதுகாப்பு பணியாளரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததோடு, ஸ்ரீதரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், இரவில் 8 மணியில் இருந்து 9 மணி வரை பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பார்வையாளர் நேரத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி அதிகாரிகள், போலீசார் உறுதி அளித்ததைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நேற்று இரவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்