மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்களின் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

மணவாளக்குறிச்சி அருகே 2 பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-17 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டணத்தை சேர்ந்தவர் சகாய ஜினோ (வயது 28), மீனவர். இவர் கடியப்பட்டணத்தில் இருந்து  முட்டம் வழியாக அம்மாண்டிவிளைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

 அம்மாண்டிவிளை சந்திப்பில் செல்லும் போது, நாகர்கோவிலில் இருந்து முட்டம் நோக்கி வந்த அரசு பஸ்சில் சகாய ஜினோவுக்கு தெரிந்த சிலர் இருந்தனர். அவர்கள் சகாய ஜினோவை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கீழே கிடந்த கல்லை எடுத்து, தன்னை கிண்டல் செய்தவர்களை நோக்கி வீசினார். ஆனால் அந்த கல் பஸ்சின் முன்பக்கத்தில் பட்டு கண்ணாடி உடைந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அப்படியும் ஆத்திரம் அடங்காத சகாய ஜினோ, முட்டத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற இன்னொரு அரசு பஸ்சின் மீதும் கல்லை எடுத்து வீசினார். அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்ததுடன், டிரைவர் பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுபற்றி பாலகிருஷ்ணன் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாய ஜினோவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்