கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறை கோர்ட்டு தீர்ப்பு

கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-04-17 22:51 GMT
மும்பை,

கர்ப்பிணி மனைவியை கொடுமைப்படுத்திய கணவர், மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

வைரவியாபாரி

மும்பை கம்பாலாஹில் பகுதியை சேர்ந்தவர் மிதுன். வைர வியாபாரி. இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு அவர் மனைவியுடன் துபாய்க்கு சென்றார்.

இந்தநிலையில் மிதுனின் மனைவி கர்ப்பமானார். அப்போது மிதுன் தாயுடன் சேர்ந்து கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சல் அடைந்த அவரது மனைவி 2007-ம் ஆண்டு இந்தியாவிற்கு நாடு திரும்பினார்.

3 ஆண்டு ஜெயில்

பின்னர் அவர் வரதட்சணை கொடுமை பற்றி கணவர் மற்றும் மாமியாரின் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, கர்ப்பிணி மனைவியை சித்ரவதை செய்த கணவர் மிதுன் மற்றும் அவரது மாமியாருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்