இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அமைதி ஊர்வலம்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்தும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தங்கச்சிமடத்தில் அமைதி ஊர்வலம் நடந்தது.

Update: 2019-04-23 22:45 GMT

ராமேசுவரம்,

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த 2 நாட் களுக்கு முன்பு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் இதுவரையிலும் 300–க்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயம் அடைந்துள்ளனர்.இலங்கையில் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்வபம் உலக நாடுகள் முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது ஆத்மா சாந்தியடைவேண்டியும், தாக்குதல் சமபவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

தங்கச்சிமடம் தூயதெரசாள் ஆலயத்தில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலத்தில் பங்கு தந்தைகள் ராஜஜெகன், சந்தியாகு,ஜலியன்,தேவா,சந்தியாமற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா,எமரிட்,சகாயம், மாவட்ட ஊராட்சிகுழு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி,முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.அருள்,வர்த்தக சங்க நிர்வாகி வல்லபகணேசன்,முஸ்லிம் ஜமாத் நிர்வாகி பசீர்,ஜெரோன்குமார் உள்பட ஏராளமான மீனவ பெண்கள்,மீனவர்கள்,பொது மக்களும் குழந்தைகளும் கலந்துகொண்டு கையில் கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்று கு ழந்தை ஏசு ஆலயத்தை அடைந்தனர்.அங்கு ஆயலம் முன்பு அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர்.

மேலும் செய்திகள்