பற்களை பாதுகாக்கும் டூத் பிரஷ்

பல் பிரச்சினைகள் இல்லாத ஆளே இல்லை

Update: 2019-04-24 07:37 GMT
பல் பிரச்சினைகள் இல்லாத ஆளே இல்லை என்று சொல்லும் வகையில் எல்லோருக்கும் ஏதோ விதமான பல் தொந்தரவுகள் இருந்து கொண்டே இருக்கும். சீனாவை சேர்ந்த 32 டீத் என்னும் நிறுவனம் ஒரு புதுவிதமான பல் தேய்க்கும் பிரஷ் மற்றும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி ப்ளாக் சைன் ( BLOCKCHAIN ) எனப்படும் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது. அதாவது இந்த செயலியை உபயோகிக்கும் பலரையும் ஒரு சங்கிலி இணைப்பாக வைத்து, ஒவ்வொரு முறை பல் தேய்க்கும் போது நமக்கான டோக்கன்களை ( CRYPTOCURRENCY ) வழங்குகிறது.

இது ஒரு குறிப்பிட்ட எல்லையை அடையும் போது நாம் பற்பசை, புதிய பிரஷ் ஆகியவற்றை அந்த டோக்கன்களை உபயோகித்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இது மட்டுமின்றி இந்த பிரஷை கொண்டு பல் துலக்கும் போது புலப்படும் உண்மை ( AUGMENTED REALITY ) தொழில்நுட்பத்தைக் கொண்டு தினசரி நமது பற்களின் சுத்தம் மற்றும் பிரச்சினைகளை ஆராய்ந்து சொல்கிறது.

எந்த இடங்களில் சரியாக சுத்தம் செய்யவில்லையோ, அதை நமது செல்போன் திரையில் காட்டுகிறது. இதனால் நம் பற்களை நாமே கவனித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகள் ஏற்படும் முன்னரே சரி செய்தும் கொள்ளலாம்.

மேலும் செய்திகள்