ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு பயணிகள் கடும் அவதி

மதுரை–ராமேசுவரம் பயணிகள் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மண்டபம் முகாம் ரெயில்வே நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2019-04-24 22:30 GMT

பனைக்குளம்,

மதுரையில் இருந்து நேற்று காலை 6.30 மணிக்கு ராமேசுவரத்திற்கு பயணிகள் ரெயில் வழக்கம்போல புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் மண்டபம் முகாம் ரெயில் நிலையத்திற்கு காலை 9.30 மணிக்கு அங்கிருந்த புறப்படும்போது திடீரென என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.என்ஜின் கோளாறை சரிசெய்ய ரெயில் என்ஜின் டிரைவர் முயன்றும் சரி செய்ய முடியவில்லை.இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக அந்த ரெயில் முகாம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டடிருந்தது.

இதனால் ராமேசுவரம் செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதை தொடர்ந்து ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு ரெயில் அங்கிருந்து 12 மணிக்கு புறப்பட்டு மண்டபம் ரெயில் நிலையத்தை வந்தடைந்து.

2 என்ஜினுடன் கூடிய பெட்டிகளுடன் ரெயில் பாம்பன் ரெயில்வே பாலத்தில் செல்வது பாதுகாப்பற்றது என்பதால் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே பழுதான என்ஜின் நிறுத்தப்பட்டு மாற்று என்ஜின் மூலம் மதுரை பயணிகள் ரெயில் பாம்பன் ரெயில்வே பாலம் வழியாக ராமேசுவரத்திற்கு மதியம் 1 மணிக்கு வந்தடைந்தது.

இதனால் ராமேசுவரத்தில் இருந்து பகல் 11.20 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் தாமதமாக மதியம் 2.20 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது.இதனால் பயணிகள் ரெயிலில் கூட்டம் அலை மோதியது.

மேலும் செய்திகள்