உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்

உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் அரியலூர் கலெக்டர் தகவல்.

Update: 2019-04-25 22:45 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் அச்சிடப்பட்ட செய்தித்தாள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் உணவு பொருட்களை பேக்கிங் செய்வதால் அதில் உள்ள காரியம் என்ற வேதிப்பொருள் உணவு பொருட்களில் கலந்து புற்றுநோய் மற்றும் அஜீரண கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உணவு விற்பனையாளர்கள் மேலே குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. உணவு பொருட்களை நுகர்வோர் வாங்கும்போது அவற்றில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் விவரம் மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் எண் போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும், உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களை உணவு பாதுகாப்பு துறையின் 94440 42322 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்