கொரடாச்சேரி அருகே மின்கம்பத்தில் பிணமாக தொங்கிய வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
கொரடாச்சேரி அருகே மின்கம்பத்தில் வாலிபர் பிணமாக தொங்கினார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வெண்ணவாசல் களத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு சவுக்கு தோப்பு அருகே மின்கம்பத்தில் வேட்டியால் போடப்பட்ட தூக்கில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். இதை பார்த்தவர்கள் உடனடியாக களத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சிவசண்முகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சிவசண்முகம், கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எப்படி இங்கு வந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மின்கம்பத்தில் வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.