போலீஸ் வேலை பார்ப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த காவலாளி கைது
போலீஸ் வேலை பார்ப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
போலீஸ் வேலை பார்ப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் வேலை
மும்பை போலீசில் வேலை பார்ப்பதாக கூறி கிரன் ஷிண்டே என்ற வாலிபர், தான் போலீஸ் சீருடையில் இருக்கும் படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தார். அதை பார்த்த இளம்பெண் ஒருவர் அவருடன் சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகி நட்புடன் பழகி வந்தார்.
நாளடைவில் இந்த நட்பு காதலாகி மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில், திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருக்கும் நிலையில், கிரன் ஷிண்டேயி ன்போலீஸ் வேலையில் அவரது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உண்மையிலேயே போலீசாக வேலை பார்க்கிறாரா? என்று விசாரிக்க தொடங்கினார்.
புதுமாப்பிள்ளை கைது
இதற்காக அவர் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து விசாரித்தார். இதில், கிரன் ஷிண்டே மும்பை போலீசில் பணியாற்றவில்லை என்பது தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் சிவாஜிநகர் போலீசில் கணவர் மீது புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுமாப்பிள்ளையான கிரன் ஷிண்டேயை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் காவலாளியாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.