திருப்பூரில் கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது

திருப்பூரில் கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-13 23:15 GMT
திருப்பூர்,

கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் பழனி(வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வெங்கட்ராமன்(28) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் பழனியிடம் சென்று முறையிட்டுள்ளார்.

உடனே நேற்று முன்தினம் இரவு பழனி, வெங்கட்ராமனிடம் சென்று இதுகுறித்து தட்டிக்கெட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த வெங்கட்ராமன் மற்றும் அவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி (33) ஆகியோர் சேர்ந்து பாட்டில் மற்றும் கத்தியால் பழனியை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த பழனியை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பழனியின் மனைவி விசாகம்(35) அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய போலீசார் வெங்கட்ராமன், குப்புசாமி ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்