தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளுக்கு அனுமதியின்றி உணவு விற்ற 4 பேர் கைது

தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனுமதியின்றி பயணிகளுக்கு உணவு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-14 22:18 GMT
மும்பை,

மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து நாக்பூர் வழியாக மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பேண்ட்ரி கார் வசதி கிடையாது.

இந்தநிலையில், தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வேயின் அனுமதி எதுவும் இன்றி 4 பேர் கும்பல் உணவுகளை பயணிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இதுபற்றி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

4 பேர் கைது

இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று அந்த ரெயிலில் பயணிகளிடம், ரெயில் வேயின் அனுமதி இன்றி உணவு விற்று வந்த 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் சிவம் சிங், சோனு சிங், முகேஷ் சிங், ராம்பால் சிங் என்பது தெரியவந்தது. சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் இருந்தே அவர்கள் உணவுகளை ரெயிலில் ஏற்றி பயணிகளிடம் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்கள் இவர்களை கண்டும் காணாமல் இருந்து உள்ளனர்.

இதையடுத்து கைதான 4 பேரையும் கல்யாண் ரெயில்வே கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும் செய்திகள்