பெரியத்திருக்கோணம் மகா திரவுபதியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

அரியலூர் அருகே உள்ள பெரியத்திருக்கோணம் கிராமத்தில் உள்ள மகா திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த மே மாதம் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-06-01 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள பெரியத்திருக்கோணம் கிராமத்தில் உள்ள மகா திரவுபதியம்மன் கோவில் திருவிழா கடந்த மே மாதம் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடந்த 31-ந் தேதி கூந்தல் முடிதல் நிகழ்ச்சி மற்றும் தீமிதி நடைபெற்றது. இதையொட்டி மகா திரவுபதியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் கோவில் அருகே உள்ள திடலில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அங்கு மகா திரவுபதியம்மன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த பக்தர்கள், தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியதிருக்கோணம் உ.பரமசிவம், அனிதா, அரி அன்ட் அகிலேஷ் அக்ரோ ஏஜென்சி நிறுவனத்தினர் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்