உருக்கு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு வேலை

உருக்கு ஆலை நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு கேட் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-06-03 10:54 GMT
இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் ((SAIL) எனப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள செயில் நிறுவன தலைமை இடத்தில் இருந்து, இதன் கிளைகளில் மேனேஜ்மென்ட் டிரெயினி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. கேட்-2019 தேர்வின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம் : மெக்கானிக்கல் - 66, எலக்ட்ரிக்கல் - 41, மெட்டலர்ஜிகல் - 7, கெமிக்கல் - 10, இன்ஸ்ட்ருமென்டேசன் 15, மைனிங்-3

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 14-6-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

பணியிடங்கள் உள்ள என்ஜினீயரிங் பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து, கேட் 2019-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை

கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணலில் பெறும் மதிப்பெண்கள் அடிப் படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜூன் 14-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.sailcareers.com என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்