காஷ்மீரில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ வீரர் தற்கொலை

காஷ்மீரில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீரர் மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-04 22:45 GMT

தேனி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறையை சேர்ந்தவர் பாண்டி. விவசாயி. இவருடைய மகன் சுரேந்திரன் (வயது 26). இவர் கடந்த 5 ஆண்டுகளாக ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

காஷ்மீரில் பணியாற்றி வந்த நிலையில் 2 மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். ஊருக்கு வந்த இடத்தில் அவர் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் கடந்த 30–ந்தேதி அவர் ஊருக்கு செல்வதாக கூறி மயிலாடும்பாறையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் ஊருக்குச் செல்லாமல் தேனி புதிய பஸ் நிலையம் பகுதியில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய தந்தை பாண்டி தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்